கொழும்பு கொமர்ஷல் கம்பனி இலங்கையின் கொழும்பில் அதன் கிளையினை தாபித்த எந்திரி ஜோன் பேன் என்பவரினால் 1872ஆம் ஆண்டில் லண்டனில் நிறுவப்பட்டது. 1872ஆம் ஆண்டு தொடக்கம் 1976ஆம் ஆண்டு வரை சுமார் 100 வருடங்களுக்கு மேல் இக்கம்பனி லண்டனில் அமையப்பெற்றிருந்த தலைமை அலுவலகத்திலிருந்து பிரித்தானியர்களால் முகாமை செய்யப்பட்டு நிருவகிக்கப்பட்டது.
திரு. பேன், கோப்பி நடுகையில் கணிசமான அனுபவத்தினை பெற்றிருந்ததுடன் கொழும்பு 02 இல், கொம்பனி வீதியில் சுமார் 13 ஏக்கர் பரப்பினை உள்ளடக்குகின்ற காணியொன்றில் “ஒக்லென்ட் ஹவுஸ்” பெயரிலான வளாகத்தின் கொழும்பில் தனது வியாபாரத்தினை ஆரம்பித்தார்.
1976 வரை வ/ப கொழும்பு கொமர்ஷல் கம்பனிகள் குழுமத்தின் தலைமை அலுவலகம் ஒக்லென்ட் ஹவுஸ், இல. 25, லிலி வீதி, கொழும்பு என்ற முகவரியில் அமைந்துள்ளது.
1965 இன் பேகிய்வுஸன் விபரக்கொத்திற்கு அமைய கம்பனியானது தோட்ட முகாமைத்துவம், உரம், தேயிலை, காப்புறுதி, இயந்திரவியல் மற்றும் மின்சாரப் பொறியியல் போன்ற துறைகளைக் கையாண்டதுடன் சுமார் 50 வெளிநாட்டு கம்பனிகளின் முகவராகவும் விநியோகத்தராகவும் செயற்பட்டது. கொழும்பு கொமர்ஷல் கம்பனி குழுமம் தேயிலை துணைக் கம்பனிகளான ஒக்லன்ட் இன்வெஸ்ட்மன்ட் என்ட் பைனேன்ஸ் கம்பனி லிமிடட், சி.சி.சி. இன்ஜினேரிங் லிமிடட், சி.சி.சி. டீஸ் லிமிடட், சி.சி.சி. பேர்டிலைஸர் லிமிடட், கொழும்பு கொமர்ஷல் ஏஜென்சீஸ் லிமிடட், கொழும்பு கொமர்ஷல் கென்ட்ரேக்ட் லிமிடட், சிலோன் மெனுபெக்ஷரஸ் என்ட் மேர்சன்ட் லிமிடட், ஹெவி இகிவ்ப்மன்ட் லிமிடட், ஹுனாஸ் போல்ஸ் ஹொட்டல் லிமிடட், எஸென்சல் ஒயில்ஸ் சிலோன் லிமிடட் ஆகியவற்றை கொண்டமைந்திருந்தது.
1971 இல் 35ஆம் இலக்க வியாபார (சுவீகரிப்பு) சட்டத்தின் கீழ் 1976 இல், வ/ப கொழும்பு கொமர்ஷல் கம்பனியானது ஒக்லன்ட் ஹவுஸில் அமைந்திருந்த அதன் தலைமை அலுவலகம் பதுளை, ஹட்டன், கந்தப்பொல, கண்டி மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களிலுள்ள அதன் கிளை அலுவலகங்களுடன் சேர்த்து அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது.
1976 இல் கொழும்பு கொமர்ஷல் கம்பனி தேசிய மயமாக்கப்படும் வரை நாட்டில் சிறந்த தனியார் துறை நிறுவனம் ஒன்றாக இது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. 1976 ஆம் ஆண்டில் கொழும்பு கொமர்ஷல் கம்பனி குழுமம் சுவீகரிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் நிரல் அமைச்சினதும் பொதுத் திறைசேரியினதும் நேரடி மேற்பார்வையின் கீழ் வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியாக அமைந்திருந்தது.
1989ஆம் ஆண்டின் போது இக்கம்பனி 1987 இன் 23ஆம் இலக்க பொதுக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் மாற்றம் செய்யப்பட்டதுடன் வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியாக மீள் பெயரிடப்பட்டது. வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் மொத்த பங்கு மூலதனம் ரூபா. 100,000,000 தொகையுடைய ஒவ்வொன்றும் ரூபா. 10 கொண்ட 10,000,000 பங்குகளைக் கொண்டிருந்தது. அதன் பின்னர் 1996ஆம் ஆண்டின் போது கொழும்பு கொமர்ஷல் லிமிடட் தனியார் மயமாக்கப்பட்டு பங்குகளின் 90% ஆனவை தனியார் முகாமைத்துவத்திற்கு மாற்றப்பட்டதுடன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் நோக்கத்துடன் எஞ்சிய 10% பங்குகள் பொதுத் திறைசேரியில் வைக்கப்பட்டன. வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியானது 1996 இன் 29ஆம் இலக்க பொதுக் கம்பனி புனரமைத்தல் சட்டத்தின் கீழ் 1997 இல் அரசாங்கத்திற்கு மீண்டும் உரித்தளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டின் வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி 2007 இன் 7ஆம் இலக்க புதிய கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
ஹுணுபிட்டிய புகையிரத நிலையத்துடன் இணைந்து அமைந்துள்ள காணி கொழும்பு கொமர்ஷல் கம்பனிக்கு (உரங்கள்) சொந்தமானதாகும். இது தேயிலை செய்து காட்டுகின்ற காணித் துண்டாக பயன்படுத்தப்பட்டது. 1962ஆம் ஆண்டின் போது அரசாங்கத்திற்கு உரித்தான இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தை நிறுவுவதற்கு இக்காணியின் பகுதியொன்று அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது. நகர அபிவிருத்தி நோக்கத்திற்காக வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் இறப்பர் செய்து காட்டல் காணித் துண்டு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பொறுப்பேற்கப்பட்டதுடன் தற்போது ஹுணுபிட்டிய பிரதேச மக்களின் பயன்பாட்டுக்காக பொது வரவேற்பு மண்டபம், நூலகம், சிகிச்சை நிலையம், வர்த்தக கட்டிடத்தொகுதி, மரக்கறிச் சந்தை, சமுர்த்தி வங்கி, பொலிஸ் அரண் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இக்கம்பனி தற்போது கமத்தொழில் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் காணப்படுவதுடன் 2011 ஜுன் மாதம் தொடக்கம் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையினால் முகாமை செய்யப்பட்டு நிருவகிக்கப்படுகின்றது.
தற்போது வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியானது இலங்கை விவசாயிகளுக்கு தரம் வாய்ந்த இரசாயண உரங்களை மொத்தமாக விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள அத்துடன் நாட்டின் விவசாய பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்ற அரசாங்கத்திற்கு உரித்தான இரண்டு நிறுவனங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது.