செயன்முறைப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் பிரிவு

 • வத்தளை மத்திய களஞ்சியசாலையிலும் நாடு பூராகவுமுள்ள பிராந்திய களஞ்சியசாலைகளிலும் தேவையான உர கையிருப்புகளை களஞ்சியப்படுத்தலும் பேணுதலும்.
 • விற்பனையும் விநியோகமும்
 • உரக்கலவைகளை உருவாக்குதலும் பொதியிடலும்

 

நிதி மற்றும் நிருவாகப் பிரிவு

நிர்வாகப் பிரிவு செயல்பாடுகள்

நிறுவனத்தின் இதயம் இருப்பது, நிதி பிரிவு நிதி மேலாளர், அவரது குழு ஏந்திய தலைமைப் பாத்திரம் வகிக்கிறது. நிதிப் பிரிவின் கோர் நடவடிக்கைகள், கணக்கு, நிதிக் தகவல், வரி விதிப்பு, பண மேலாண்மை மற்றும் நிதி கட்டுப்படுத்தும் வழங்கும், பரிமாற்ற செயலாக்க.

நடவடிக்கைகள் கள் மற்றும் பின்வரும் நோக்கங்களுக்காக பூர்த்தி செய்யும் உற்பத்தி மற்றும் தகவல் பயன்படுத்தி கவனம் செலுத்துகிறது, நிதி, நடவடிக்கைகள் ஒவ்வொரு நிறுவனமும் ஏற்பட்டுள்ள பெறப்பட்டதால்.

  • கணக்கீடு – நிறுவனத்தின் செயற்பாடுகளின் நிதிசார் நடவடிக்கைகளை பதிவு செய்தல்
  • இணங்குவித்தல் – அரசாங்த்தினதும் ஏனைய ஒழுங்குபடுத்தல் நிறுவனங்களினதும் தேவைப்பாடுகளை நிறைவேற்றுதலும்
  • முகாமைத்துவமும் கட்டுப்படுத்தலும் – கம்பனியினது குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு தொழிற்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்தல், கண்காணித்தல் மற்றும் ஊக்குவித்தல் என்பனவற்றுக்கு நிதியியல் மற்றும் தொடர்புடைய தகவல்களை உருவாக்குதலும் பயன்படுத்தலும்
  • மூலோபாயம் மற்றும் இடர் – மூலோபாயத்தினை உருவாக்குவதற்கும் அமுலாக்குவதற்கும் இடர்களை முகாமை செய்வதற்கும் நிதியியல் எதிர்பார்க்கைகளை அறிவித்தலும் செல்வாக்கு செலுத்தலும்.
  • நிதியளித்தல் – கம்பனிக்கு அவசியமான நிதியியல் வளங்களை பெற்றுக் கொள்வதற்கும் பேணுவதற்கும் முதலீட்டு செயற்பாட்டில் ஈடுபடுதல்.

 

நிதிப் பிரிவின் செயற்பாடுகள்

  • கம்பனியின் கணக்கீடு மற்றும் நிதி தொடர்பிலான பதிவேடுகள் அனைத்தையும் பேணுதல்.
  • கப்பற் சரக்குகளுக்காக நிதி ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு வங்கிகளுடன் உறவினைப் பேணுதல்.
  • வியாபாரத்துடன் தொடர்புடைய விடயங்களில் அக்கறைதாரர்களுடன் உறவினைப் பேணுதல்.

கொள்வனவு மற்றும் வழங்கல் பிரிவு

 • வழங்குநர்களை பதிவு செய்தல் (இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாடு)
 • இரசாயண உரங்கள் கொள்வனவுடன் தொடர்புபட்ட செயற்பாடுகள்
 • அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுடன் தொடர்புபட்ட செயற்பாடுகள்.
 • அனைத்து வழங்கல், இறக்குமதிகள், கப்பற் சேவை என்பனவற்றுடன் தொடர்புபட்ட செயற்பாடுகள்

 

உள்ளக கணக்காய்வு பிரிவு

நிறுவனத்தின் முறைமைகள், செயன்முறைகள் மற்றும் கலாசாரம் பற்றி ஆழமான புரிந்துணர்வினை அவர்கள் பெற்றுள்ளனர். ஆளுகை செயன்முறைகள் சிறப்பாகக் காணப்படுகின்றன என்றும் இடர்களை தணிப்பதற்கும் நிறுவனத்தின் மூலோபாய, தொழிற்பாட்டு, நிதியியல் மற்றும் இணங்குவித்தல் குறிக்கோள்களை எய்துவதற்கும் நடைமுறையில் காணப்படுகின்ற உள்ளக கட்டுப்பாடுகள் போதுமானவை என்றும் எமது சிரேஷ்ட முகாமைத்துவத்திற்கும் ஆளுகை நிறுவனங்களுக்கும் அவர்கள் உத்தரவாதம் வழங்குகின்றனர். வியாபார செயன்முறை தரவுகளில் பகுப்பாய்வுகள் மற்றும் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு உள்நோக்கு மற்றும் பரிந்துரைகளை வழங்குவதன் மூலமும் குறிக்கோள் ஆலோசனைகளின் சுயாதீன மூலத்தினை வழங்குவதன் மூலமும் நிறுவனத்தின் செயற்திறனையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதற்கு உதவுபவர்களாகக் காணப்படுகின்றனர்.

சட்டப் பிரிவு

கம்பனியின் சட்டப் பிரிவானது நிருவாகம் மற்றும் நிதி, கொள்வனவு மற்றும் வழங்கல், செயன்முறைப்படுத்தல் மற்றும் விநியோகம் அத்துடன் உள்ளகக் கணக்காய்வு போன்ற கம்பனியின் அனைத்து பிரிவுகளுடனும் தொடர்புடைய பல சட்ட கடமைகளை கையாளுகின்றது.

 • அனைத்து வழக்குகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் காலத்திற்கு காலம் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை கையாளுதலும் பின்தொடர் செயற்பாடுகளும்.
 • நீதிமன்ற நடவடிக்கைகளிலும் ஏனைய நீதி நிறுவனங்களிலும் (தொழில் திணைக்களம், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஏனைய ஒழுங்குபடுத்தல் நிறுவனங்கள்) கம்பனி சார்பாக தோற்றுதலும் பிரதிநிதித்துவம் செய்தலும்
 • வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தொடர்புடைய ஆவணங்களை தயாரித்தல்.
 • நடுத் தீர்ப்புகளில் பிரதிநிதித்துவம் செய்தல்.
 • கம்பனியுடன் தொடர்புடைய கருமங்களுக்காக சட்டமா அதிபர் திணைக்களம், ஏனைய அரசாங்க ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் கோருதல்.
 • கம்பனியின் அனைத்து உள்ளக சட்ட ஆவணங்கள், ஒப்பந்தங்கள், உரிமைப் பத்திரங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கோரிக்கை கடிதங்கள் போன்றவற்றை வரைதல், தயாரித்தல் மற்றும் சான்றுபடுத்தல்.
 • கம்பனியின் ஏனைய பிரிவுகளால் தயாரிக்கப்படுகின்ற ஆவணங்கள் மற்றும் கடிதங்கள் தொடர்பில் உதவுதல், பொருத்தமான மற்றும் செம்மையான பரிந்துரைகளை வழங்குதல்.
 • கம்பனியின் அனைத்து உள்ளக சட்ட விசாரணைகள் மற்றும் ஒழுக்காற்று விசாரணைகளை கையாளுதலும் பிரதிநிதித்துவம் வழங்குதலும்

Latest News