கெளரவ அமைச்சரின் செய்தி

minister
கௌரவ மஹிந்த அமரவீர
கமத்தொழில் அமைச்சர்
<pதன்னிறைவு பெற்ற நாடொன்றினைக் கட்டியெழுப்பும் கமத்தொழில் அமைச்சின் பணியானது, அமைச்சின் மேற்பார்வையின் கீழ் வருகின்ற நிறுவனங்கள் மற்றும் கம்பனிகள் நல்கிய ஒத்துழைப்பின் காரணமாக பாரிய வெற்றியாக அமைந்திருந்தது. அத்தகைய நிறுவனங்களுக்கு மத்தியில் வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி விஷேட பங்கொன்றினை ஆற்றுகின்றது. கமத்தொழில் அமைச்சினால் விவசாயிகள் மத்தியில் உரம் விநியோகிப்பதற்கு வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் பங்களிப்பின்றி விவசாயிகளுக்க உரிய காலத்தில் உரங்களை பகிர்ந்தளிக்கும் செயன்முறை வெற்றிகரமற்றதாகவே அமைந்திருக்கும். கமநலச் சேவை நிலையங்கள் முழுவதிலும் விவசாயிகளுக்கு விவசாய உரங்களை பகிர்ந்தளிக்கும்போது வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் ஊழியர்கள் தேசிய கடமையொன்றினை செயலாற்றுகின்றனர்.

இச்செயன்முறையின் போது நாடு பூராகவும் விவசாயிகளின் உள்ளங்களில் நம்பிக்கையினை வளர்ப்பதில் வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி வெற்றியடைந்தது. வாடிக்கையாளர் சேவையை நோக்காகக் கொண்ட கம்பனியாக வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனிக்கு எதிர்வரும் ஆண்டுகளிலும் அதன் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகின்றேன்.

Latest News