கெளரவ இராஜாங்க அமைச்சரின் செய்தி

கௌரவ சஷீந்திர ராஜபக்ஷ
கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்

இலங்கையின் கமத்தொழில் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் வருகின்ற அரசுக்கு சொந்தமான கம்பனிகளில் ஒன்றாக வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி திகழ்கின்றது. கம்பனியின் பணியானது நெற் பயிர்ச் செய்கையினை பிரதான இலக்காகக் கொண்டு இலங்கையின் விவசாயிகளுக்கு தரம்வாய்ந்த உரங்களை வழங்குவதாகும்.

பல்வேறு நிலைகளில் தரப் பரிசோதனை செயன்முறைக்கு உட்படுத்தப்படுகின்ற அத்துடன் வேண்டப்பட்ட தர நியமங்களுக்கு அமைவாக தரத்தினை உறுதி செய்கின்ற “கொமர்ஷல் பொஹர” என்ற வர்த்தக நாமத்தின் கீழ் வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியினால் சந்தைப்படுத்தப்படும் தரம் வாய்ந்த உற்பத்திகள் மீது விவசாயிகள் பூரண நம்பிக்கை வைக்க முடியும் என்பதனை கம்பனி உறுதி செய்கின்றது.

முன்னர் மானிய விலையில் உரம் வழங்குவதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பண அளிப்புகளை வழங்குகின்ற அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய திட்டத்தின் கீழ் விவசாயிகள் எந்தவொரு விற்பனை நிலையத்திடமிருந்தும் தமது தெரிவுக்கு அமைய தற்போது உர வகைகளை கொள்வனவு செய்ய முடியும். இச்சந்தைச் சூழ்நிலையில் வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி விவசாயிகளுக்கு உயர் தரம் வாய்ந்த உரங்களை வழங்குகின்ற போது அதன் உற்பத்திகளை மிகப் போட்டியான விலைகளில் விற்பனை செய்ய முடியும் என நான் நம்புகின்றேன். கம்பனியின் வியாபாரத்தில் முன்னேற்றம் பெறுவதற்கு அவர்கள் அனைவரையும் வாழ்த்துவதற்கு இதனை நான் ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கின்றேன்.

Latest News